கடந்த பதிவிலையே நாம் இந்த புதிய இணைய சேவை பற்றி பேசிவிட்டோம். இனி இந்த இணையசேவையை எப்படி உங்கள் பிளாகில் இணைக்கலாம் என்று பார்க்கலாம். கீழ்கண்ட ஸ்கிரிப்டை உங்கள் பிளாகில் இணைத்தால், உங்கள் பிளாகின் visitors உங்கள் பதிவை பிடித்திருந்தால், voting மூலம் “பரிந்துரைப்பார்கள்”. எனது இந்த பதிவின் இடது பக்கத்தில் இந்த buttonஐ பார்க்கலாம்:
தமிழ்மணம் மற்றும் சில பதிவர்களிடையே உரசல் நடந்து கொண்டிருக்கும் போது நான் என்னுடைய புதிய அருமையான (அதெல்லாம் நீயா சொல்லிக்கப்படாது!) இணையத்தை அறிமுகப்படுத்துவதால் அதை தமிழ்மணம் மற்றும் தேன்கூடுக்கு போட்டியாக நினைக்ககூடாது.
என்னுடைய புதிய தளசேவை பதிவுகளிருந்து மட்டுமல்லாது அனைத்து தமிழ் இணையதளத்திலிருந்தும் சிறந்த செய்திகளை தருவிக்கும்.
பரிந்துரை, மிகச்சிறந்த தமிழ் படைப்புகளை வாக்குகள் மூலம் அடையாளம் காட்ட உதவும் ஒரு கருவி. நீங்கள் சமர்பிக்கும் செய்தி / பதிவுகளை பிற இணைய உபயோகிப்பாளர்கள் தங்கள் வாக்குகளை அளித்து தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள். அதிக வாக்குகளை பெறும் செய்திகள், “பரிந்துரை” இணையத்தின் முதல் பக்கத்தில் வரும். இதனால் சிறந்த படைப்புகள் முகப்பில் வருவது மட்டுமல்லாமல், அந்த குறிப்பிட்ட இணையத்திற்கு / பிளாகிற்கு அதிக விசிடர்ஸ் கிடைக்க வழிவகுக்கும்.
ஒரு வருடம், 80 பதிவுகள், 8840 ஸ்பேம் பின்னூட்டங்கள் ஒரு வருடம் ஆகிவிட்டது இந்த பிளாக் தொடங்கி, பரிசு போட்டிகள், கதை, கவிதை, வீடியோக்கள் என்று எப்படியோ ஒரு வருடம் ஓட்டியாகிவிட்டது. எப்படியாவது நூறு பதிவுகள் எழுதி விட வேண்டும் என்ற எண்ணம் கைவிடப்பட்டு வெறும் எண்பது பதிவுகளோடு நிற்கிறது. இதில்
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நான் எழுதிய பதிவுகளோ 80 தான் ஆனால் akismet ஸ்பேம் கில்லரால் இதுவரை கொல்லப்பட்ட ஸ்பேம் பின்னூட்டங்களின் எண்ணிக்கை 8840 (அம்மே!).
அலுவலகத்தில் ஆணி பிடுங்குதல், என்னுடைய tamilhunt.com, hikanyakumari.com போன்ற இனையதளங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்கிடையேயும் சில நல்ல பதிவுகள் (!) எழுதிய திருப்தி கண்டிப்பாக இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பதிவுகள் என்றால்:
சுத்தி எத்தனை பேர் நின்றாலும் ஹீரோ அவர்களை சுழற்றி சுழற்றி அடிக்கும் வழக்கமான படம் தான் என்றாலும், ஆக்ரோஷமாக பல தடைகளையும் தாண்டி வந்திருப்பதால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கிறது. சொன்னா நம்ப
மாட்டீங்க, படத்தில ஹீரோயினே கிடையாது. ஹீரோயின் இருந்திருந்தா ஹீரொவின் ஆக்ரோஷம் கொஞ்சம் குறைந்திருக்கலாம். காமெடி சூப்பரா இருக்குங்க! தன்னால் ஹீரோவை சமாளிக்க முடியும் என்று தங்கமணிகளிடம்
படம் காட்டி, ஹீரோ அருகே வந்ததும் உயரமான மரங்களை பார்த்து ஓடும் அந்த வருத்தபடாத வாலிபர்கள் கேங் அடிக்கும் லூட்டிகள் செம ரகளை. அதிலும் குறிப்பா ஒரு இளைஞர் கிட்னி பேடோடு ஹீரோவோடு சண்டைக்கு வரும் போது படம் பார்க்கும் அனைவரையும் சிரிப்பு பற்றிக்கொள்கிறது. இனி இந்த படத்தைப் பற்றிய சில கொசுறுகள்.
1. இந்தப் படத்துகாக ஹீரோ கடுமையாக உழைத்திருக்கிறாராம்…. சில மாதங்களிலேயே 75 KG வெயிட் ஏத்திருக்கிறார்.
2. ஆனால் சண்டைக்கு போகும் போதெல்லாம் சாராயம் அடித்து விட்டு தான் சண்டைக்கு போகிறார். அன்புமணி ராமதாஸ் கண்டுகொள்வாராக..
3. சில இடங்களில் வெளிநாட்டினரையும் பார்க்க முடிந்தது.
இப்படம் சம்பந்தமான காட்சிகள் கிழே:
;
;
;
;
;
;
;
;
;
;
——————————————————————————–
என்னை மொக்கை போட அழைத்த பொன்வண்டுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்
மேட்டருக்கும் வரும் முன், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மேட்டர் என்னானா: புத்தாண்டு அன்று, ராபின் மேடிசன் என்பவர் 322 அடி தூரத்தை தனது பைக்கில் பறந்தே கடந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். (அதுவும் ஒரு முறை அல்ல இரண்டு முறை) 322 அடி என்பது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட நீழம் ஆகும். இந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியை கீழே கண்டு களியுங்கள்.